கன்னட மொழியில் வெளியான ஐஸ்வர்யா என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் தீபிகா படுகோன். இந்தியில் ஓம் ஷாந்தி ஒம் படத்தில் ஷாருக்கானுக்கனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதனை தொடர்ந்து, இந்தி சினிமா உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தீபிகா படுகோன் சிறந்த நடிகைக்கான உலக சாதனையாளர் விருதை வென்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். நடிகை தீபிகா படுகோன் கடந்த 2018ஆம் ஆண்டு பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
தீபிகா படுகோன் நடித்தகெஹ்ரயான் என்கிற இந்திப்படம், பிப்ரவரி 11-ந்தேதி ஓடிடி-யில் ரிலீசாகி உள்ளது. ஷகுன் பத்ரா இயக்கிய கெஹ்ரையன், நவீன கால உறவுகளின் நாடகம். தீபிகா படுகோன் மற்றும் சித்தாந்த் சதுர்வேதி தவிர, படத்தில் அனன்யா பாண்டே, தைரிய கர்வா, நசிருதீன் ஷா மற்றும் ரஜத் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். வயதுவந்தோருக்கான இந்தப் படத்தில் அந்தரங்கமான படுக்கையறை மற்றும் முத்தக் காட்சிகளில் தீபிகா படுகோன் நடித்திருப்பது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
இந்தி நடிகர் ரன்வீரை காதல் திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோன் இப்படிப்பட்ட காட்சியில் நடித்தது பற்றி அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, மற்ற நடிகர்களுடன் நெருக்கமாக நடிப்பது குறித்து ரன்வீர் மிகவும் பெருமையாக நினைக்கிறார் என தான் நினைப்பதாகவும்… மேலும் தனது நடிப்பைப் பற்றி அவர் மிகவும் பெருமைப்படுகிறார் என்றும் கூறியுள்ளார்.. இந்நிலையில் இந்தப் படத்தில் தீபிகாவுடன் நெருக்கமாக நடித்தது குறித்து கதாநாயகன் சித்தாந்த் சதுர் வேதி கூறுகையில், இந்த படத்தின் கதையைக் கேட்ட உடனேயே நடிக்க ஒப்புக் கொண்டேன். காரணம் என்னுடன் ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார் என்பதுதான். கதையின் படி படத்தில் முத்தக்காட்சிகள் முழுக்க இடம் பெற்றுள்ளது. இந்த காட்சியில் தீபிகா படுகோனேவுடன் நடிக்க மிகவும் பயந்தேன். இத்தனை நெருக்கமான முத்தக்காட்சிகள் அவசியம்தானா? என டைரக்டர் ஷகுனிடமும் கேட்டேன். பின்னர் கதைக்கு அவசியம் என்பதால் அந்த காட்சிகளில் பதற்றத்துடனே நடித்து முடித்தேன். என கூறியுள்ளார்..
இந்த நிலையில் இந்த படத்தை குப்பை என்று வர்ணித்திருக்கிறார் கங்கனா ரணவத். இதுகுறித்து அவர் கூறுகையில், நானும் இந்த தலைமுறையை சேர்ந்தவள்தான். தயவு செய்து டீன் ஏஜ் நவீன திரைப்படம் என்ற பெயரில் குப்பைகளை விற்க வேண்டாம். தரமற்ற திரைப்படங்கள் எப்போதும் தரமற்றமவை தான். எந்த வகை ஆபாசத்தை காட்டியும் அந்த படத்தை காப்பாற்ற முடியாது. இது அடிப்படை உண்மை. கெஹ்ரையான் படத்தில் எந்தவிதமான ஆழமான கருத்துகளும் இல்லை என தனது சமூக வலைத்தள பக்கத்தில் விமர்சித்திருக்கிறார் கங்கணா ரணவத்!
- புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடைஇளைஞர்களின் உடல்நலன் மற்றும் வாழ்க்கையை பாதிக்கும் குட்கா,பான்மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு மேலும் ஒராண்டுதடைவிதித்து தமிழக அரசு […]
- பள்ளி குறித்த திட்டங்களுக்கு தமிழில் பெயர்… முதல்வர் பேச்சுதமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு நல்ல திட்டங்களை […]
- யோகி ஆதித்யநாத்தை விமர்சித்த சிறுவனுக்கு நூதுன தண்டனை..உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை விமர்சிக்கும் விதமாக சமூக வலைத்தளங்களில் படத்தை பகிர்ந்த 17 வயது […]
- ஸ்டாலினின் மோசமான நடத்தையை கண்டு வெட்கி தலைகுனிகிறேன் -அண்ணாமலை டூவிட்பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.சென்னை […]
- மதுரை – தேனி புதிய அகல ரயில்பாதை திட்டம் – பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.மதுரை தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய அகல ரயில் பாதை திட்டம் – பிரதமர் […]
- தும்பை விட்டு வாலைப்பிடிக்கிறார் ஸ்டாலின் -செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டுதும்பை விட்டு வாலைப் பிடிப்பது போன்று கச்சத்தீவை விற்றது கருணாநிதி ஆட்சி காலத்தில் தான் தற்போது […]
- போக்சோ தண்டனையில் விடுதலையானவர் மீண்டும் போக்சோ சட்டத்தில் கைதுஜெயங்கொண்டம் அருகே போக்சோ சட்டத்தில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலையானவர் மீண்டும் போக்சோ சட்டத்தில் கைது […]
- கழுத்து கருமை நீங்க:சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறிதளவு வெங்காயச் சாறு, இரண்டு சொட்டு ஆலிவ் ஆயில் மற்றும் பயத்தமாவு கலந்து […]
- டென்மார்க்கில் 25 வயதிற்குள் திருமணம் ஆகவில்லையென்றால் இதுதான் சம்பிரதாயமாம்…இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. […]
- முளைகட்டிய கோதுமை இனிப்புப் புட்டு:தேவையானவை:கோதுமை – ஒரு கப் நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவு நெய் – சிறிதளவு […]
- கலைஞர் கருணாநிதி திரு உருவ சிலை திறக்கப்படும் நாள் அனைவருக்கும் தித்திப்பான நாள்… ஸ்டாலின் நெகிழ்ச்சிசென்னை ஓமந்தூரார் தோட்ட அலுவலகத்தில் நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில் கருணாநிதி சிலையை […]
- தமிழ் மொழி நிலையானது. தமிழ் கலாச்சாரம் உலகளாவியது- மோடி பெருமிதம்பொங்கல், புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வம் நிறைந்தவை தமிழ் மொழி நிலையானது,அதன் கலாச்சாரம் உலகளாவியது என […]
- ரூ.31500 கோடியில் திட்டங்கள்- பிரதமர் துவக்கி வைத்தார்தமிழகத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் பிரதமர் […]
- இதுதான் திராவிட மாடல் -மோடியின் முன்பு ஸ்டாலின் பேச்சுபல்வேறு திட்டங்களை துவக்கிவைக்க பிரதமர் மோடி தமிழக வந்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் திராவிடமாடல் குறித்த […]
- சிந்தனைத் துளிகள்• வேத புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது.அதன்படி ஒட்டி ஒழுகுவதன் மூலமேவேதாந்தம் காட்டும் பாதையை அடையலாம். […]