கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டாவில் புதிய டொயோட்டா காம்ரி (Toyota Camry) கார் அறிமுக விழா நடைபெற்றது.
கார் பிரியர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த டொயோட்டா காம்ரி (Toyota Camry) கார் அறிமுக விழா கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமில் வாடிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
புதிதாக அறிமுகமாகி உள்ள Toyota Camry – சிமென்ட் கிரே, ஆட்டிட்யூட் பிளாக், டார்க் ப்ளூ, எமோஷனல் ரெட், பிளாட்டினம் ஒயிட் பெர்ல் மற்றும் பிரீசியஸ் மெட்டல் ஆகிய 6 கலர் ஆப்ஷன்களில் வருகிறது. புதிய Toyota Camry -யில் டொயோட்டாவின் ஐந்தாவது-ஜென் ஹைப்ரிட் அமைப்புடன் 2.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 12.3-இன்ச் டூயல் டிஸ்ப்ளேக்கள் பவர்டு பேக் சீட்ஸ் மற்றும் 9-ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் உடன் வருகிறது.
பாதுகாப்பை பொறுத்த வரையில் இது பிரீ கொலிஷன் சிஸ்டம், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் போன்றவற்றுடன், ஒன்பது ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
புதிதாக அறிமுகம் ஆகி உள்ள டொயோட்டா காம்ரி கார் விற்பனைக்கான முன்பதிவுகள் நடைபெற்று வருவதாக வருவதாக விற்பனை அதிகாரிகள் தெரிவித்தனர்.