• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கொலம்பியாவில் பயிற்சியின் போது நேருக்கு நேர் மோதிய விமானங்கள்..!

Byவிஷா

Jul 3, 2023

கொலம்பியாவில் விமானப் பயிற்சியின் போது விமானங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலம்பியாவில் இருக்கும் அபியாய் பகுதியில் ராணுவ வீரர்கள் விமான பயிற்சியில் ஈடுபட விமானப்படைத்தளம் அமைந்துள்ளது. இங்கு எப்போதும் போன்று வானில் விமான சாகசங்கள் நடந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

சுக்கு நூறாக நொறுங்கி கீழே விழுந்த இரண்டு விமானங்களில் இருந்த விமானிகளில்  ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி படுக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.