• Sun. Apr 19th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

தென்காசியில் புதிய புறக்காவல் நிலையம் திறப்பு!

தென்காசி காவல் நிலைய எல்லையான ஆசாத்நகரில், புதிதாக புறக் காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS இன்று (30.1.2022) ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

இந்த புறக்காவல் நிலையமானது 24 மணி நேரமும் இயங்கும் விதமாகவும், திருநெல்வேலி, ஆலங்குளம், பாவூர்சத்திரம், அம்பாசமுத்திரம் மற்றும் கடையம் ஆகிய பகுதிகளில் இருந்து தென்காசி நகருக்குள் இந்த புறக் காவல் நிலையத்தை கடந்த பின்னரே நுழையும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன், தென்காசி காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலமுருகன், மேலும் காவல் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.