• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சென்னையில் பூங்காக்கள் பராமரிப்பிற்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு..!

Byவிஷா

Apr 29, 2023

சென்னை மாநகராட்சியில் உள்ள பூங்காக்கள் பராமரிப்பு மற்றும் ஒப்பந்தம் எடுப்பது குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ளார்.
சென்னையில் அரசு சார்பாக ஏராளமான பூங்காக்கள் இயங்கி வருகின்றன. என்னிடையில் சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் பூங்காக்கள் பராமரிப்பு குறித்த விவாதம் நடைபெற்ற நிலையில் குறிப்பிட்ட ஒரு ஒப்பந்ததாரர் மட்டுமே அனைத்து பூங்காக்கள் பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்வதால் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சியில் உள்ள பூங்காக்கள் பராமரிப்பு மற்றும் ஒப்பந்தம் எடுப்பது குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
பூங்காக்கள் பராமரிப்பு ஒப்பந்தங்கள் சில தொகுப்புகளாக பிரித்து ஒப்பந்தம் கோரப்படும் எனவும் ஒரு தொகுப்பு ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரருக்கு மற்ற தொகுப்பு ஒப்பந்தம் வழங்கப்படாது என்றும் பராமரிப்புக்கான தொகை பணியின் தர அளவீட்டு மதிப்பெண் அடிப்படையில் விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பத்துக்கும் குறைவான பூங்காக்கள் பராமரிக்கப்பட்டாலும் அதனால் தரமான பூங்காக்கள் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.