பெங்களூருவில் வீடு வாடகைக்கு தேடிய நபருக்கு பிளஸ் டூ தேர்வில் மதிப்பெண் குறைவாக இருந்ததாக வீட்டு உரிமையாளர் வீடு கொடுக்க மறுத்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புது விதமான நிகழ்வுகள் குறித்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில சம்பவங்கள் காண்போரை வியக்க வைக்கும் வகையில் இருக்கும். அதன்படி தற்போது ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது வீடு வாடகைக்கு கேட்ட நபரிடம் பிளஸ் 2 சான்றிதழ்களை வாங்கி பார்த்த உரிமையாளர் 75சதவீத மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துள்ளதாகவும் 90சதவீத மதிப்பெண் எடுத்தால் மட்டுமே வீடு வாடகைக்கு கிடைக்கும் எனவும் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர் ட்விட்டரில் அதனை பகிர்ந்து உள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது