• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மாமனார் மிரட்டியதால் ரயில் முன் பாய்ந்த புது மாப்பிள்ளை!

By

Sep 2, 2021 ,

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கரிசல்பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சமத்துவபுரத்தைச் சேர்ந்த ஜாபர் ராஜா முகமது என்பவரது மகளை திருமணம் செய்து செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது மனைவிக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பே வேறு ஒருவருடன் திருமணமான விஷயம் பாலமுருகனுக்கு தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பாலமுருகன், மாமனாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பாலமுருகனை கொலை செய்து விடுவேன் என ஜாபர் ராஜா மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பாலமுருகன், கன்னியாகுமரியிலிருந்து மதுரை நோக்கி சென்ற மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அதனைக் கண்ட பொதுமக்கள் பாலமுருகனை தடுத்து நிறுத்தி, திருமங்கலம் நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.