மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மண்டாவியா தலைமையில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் காசநோய் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில், சத்தீஸ்கர், பீகார், ஹரியானா, டெல்லி, மகாராஷ்டிரா, ஒடிசா, இமாச்சல் பிரதேசம் , ஜார்கண்ட், ராஜஸ்தான்,கேரள உள்ளிட்ட மாநில சுகாதாரத்துறை அமைசர்கள் மற்றும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஸ் பூஷன், கூடுதல் செயலாளர்கள் ஆர்த்தி அஹஜா மற்றும் மனோகர் அக்னானி ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா,
காசநோயே இந்தியாவில் இல்லாத நிலையை அடைய மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், நம்மால் மட்டும் முழுமையாக கட்டுப்படுத்த முடியாது எனவும் இதில் மக்களுடைய ஒத்துழைப்பு தேவை என்பதால் மக்களை காசநோய்-க்கு எதிரான விழிப்புணர்வுல் மக்களுக்கும் பங்கேற்க பொதுமக்களை மாநில அரசுகள் ஊக்கப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். 2025ம் ஆண்டுக்குள் இந்தியாவை காசநோய் இல்லாத நாடக மாற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் முயற்சியில் மாநில / யூனியன் அரசு தரும் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என தெரிவித்துள்ளார். செப்டம்பர் மாதத்தில் ஆசிரியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க கூடுதல் தடுப்பூசி வழங்கபடும் என தெரிவித்தார். மேலும், அதன் பின் தினசரி மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள காய்கறி விற்பனையாளர்கள் மற்றும் ரிக்க்ஷா ஓட்டுனர்களுக்கு தடுப்பூசி விரைந்து செலுத்த சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தி விரிவாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். தேவைக்கு ஏற்ப மாதந்தோறும் தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்க படுவதால் தடுப்பூசி கிடைப்பதில் உள்ள தடைகள் நீங்கும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களிடம் மத்திய அமைச்சர் உறுதியளித்தார்.