நடிகர் சந்தானம் நடிப்பில் ஜூலை 29 அன்று குலுகுலு படம் வெளியானது. இதற்கடுத்து அவர் நடித்துள்ள ஏஜெண்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கின்றன. அதனை தொடர்ந்து அவர் நடிக்கும் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.மதுரை அன்புசெழியன் தயாரிப்பில் சந்தானம் நடிப்பதாக ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்தார்.
அந்தப் படத்துக்கான இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை இறுதிசெய்வதில் தாமதம்ஏற்பட்டுவந்தது. சந்தானம், அன்பு செழியன் இருவருக்கும் திருப்தி ஏற்படும் வகையில் எந்த இயக்குரும் கதை சொல்லவில்லை தற்போது இயக்குநரை முடிவு செய்திருக்கிறார்கள். 2015 இல் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான இந்தியா பாகிஸ்தான் படத்தை இயக்கிய என்.ஆனந்த், சந்தானம் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார். அவர் சொன்ன கதை சந்தானம் மற்றும் தயாரிப்பாளர் அன்புசெழியன் ஆகியோருக்குப் பிடித்துவிட்டதால் அவரை ஒப்பந்தம் செய்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.இயக்குநர் என்.ஆனந்த், சிவகார்த்திகேயன் தற்போது நடித்துவரும் பிரின்ஸ் படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.