• Thu. Apr 25th, 2024

ஸ்ரீமதி வழக்கில் புதிய ஆதாரம்- சிசிடிவி காட்சியால் பரபரப்பு

ByA.Tamilselvan

Sep 13, 2022

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தில் புதிய ஆதாரம் வெளியாகியுள்ளது.
மாணவி உயிரிழந்த ஜூலை 13ஆம் தேதி இரவு 7 மணியளவில் பள்ளி நிர்வாகத்துடன் செல்வி தரப்பு பேசியதாக ஆதாரம் வெளியானது. அந்த வீடியோவில், ஸ்ரீமதி தரப்பில் அவரது தாய் செல்வி உட்பட 9 பேர் பேச்சுவார்த்தையில் இருந்துள்ளனர். ஸ்ரீமதி ஜூலை 13ஆம் தேதி உயிரிழந்த நிலையில் அன்றைய தினமே பேச்சுவார்த்தை நடந்த காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன. பள்ளி நிர்வாகம் தங்களை அழைத்து பேசவில்லை என செல்வி குற்றச்சாட்டு முன்வைத்திருந்த நிலையில் தற்போது ஆதாரம் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *