• Fri. Jun 13th, 2025
[smartslider3 slider="7"]

500 பெண் ஓட்டுனர்களுக்கு புதிதாக ஆட்டோ…

Byகாயத்ரி

Apr 27, 2022

500 பெண் ஓட்டுனர்களுக்கு புதிதாக ஆட்டோ வாங்குவதற்கு தலா ஒரு லட்சம் வழங்கப்படும் என்று தமிழகத் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிபி கணேசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மீதான விவாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அமைச்சர் சி வி கணேசன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்கும் பொருட்டு புதிதாக 11 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் தமிழ் மொழியில் வழங்கப்படும். தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிதாக ஆட்டோ ரிக்ஷா வாங்குவதற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என பல அறிவிப்புகளை வெளியிட்டார்.