• Mon. Jun 5th, 2023

இன்ஸ்டாகிராமின் புதிய அறிவிப்பு..!

Byகாயத்ரி

Nov 18, 2021

இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கு தொடங்குபவர்கள் இனி செல்ஃபி வீடியோ கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.


சமூக ஊடக தளத்தில் போலி சுயவிவரங்கள் மற்றும் ஸ்பேம் கணக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய நபரின் அடையாள சரிபார்ப்புக்கு இந்த புதிய முறை உதவும்.


தலையை வெவ்வேறு திசைகளில் திரும்பியபடி ஒரு சிறிய வீடியோவை இன்ஸ்டாகிராம் கேட்கும். இந்த வீடியோ செல்ஃபிகள் பின்தளத்தில் சேமிக்கப்படாது மற்றும் 30 நாட்களில் நீக்கப்படும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது.நீங்கள் பதிவேற்றும் வீடியோ செல்ஃபிகள் ஒருபோதும் பிளாட்ஃபார்மில் காட்டப்படாது. பயோமெட்ரிக் தரவைச் சேகரிக்க மாட்டோம் அல்லது நிறுவனத்தின் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மாட்டோம் என்று நிறுவனம் உறுதியளிக்கிறது.


கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இதேபோன்ற பாதுகாப்பு சோதனை அம்சத்தை இன்ஸ்டாகிராம் முதன்முதலில் வெளியிட்டது. ஆனால், சில தொழில்நுட்ப சிக்கல் காரணமாக அது தொடரவில்லை.இன்ஸ்டாகிராம் தற்போதுள்ள அனைத்து கணக்குகளுக்கும் வீடியோ செல்ஃபி சரிபார்ப்பைக் கேட்கவில்லை என்றும் புதிய கணக்குகள் மட்டுமே கேட்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *