தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. நேஷனல் கிரஷ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா தற்போது பாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். தமிழில் சுல்தான் மற்றும் வாரிசு போன்ற படங்களில் நடித்துள்ள நடிகை ராஷ்மிகா தான் ஒரு வெஜிடேரியன் என அடிக்கடி பேட்டிகளில் கூறி வருகிறார்.
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா தற்போது ஒரு பிரபலமான நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ளார். அதாவது நடிகர் ராஷ்மிகா சிக்கனை கடித்து சாப்பிட்டார். மேலும் தான் ஒரு வெஜிடேரியன் என்று கூறும் ராஷ்மிகா பணத்திற்காக இப்படி நான்வெஜ் சாப்பிடுவதா என்று நெடிசன் பலரும் இணையத்தில் ட்ரோல் செய்து வருகிறார்கள்.