• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சென்னை திரும்பிய நெல்சன் மற்றும் ரஜினிகாந்த்..,

BySeenu

Sep 24, 2025

ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிந்து இயக்குனர் நெல்சன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினர்.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படம் இரண்டாம் பாகத்தின் சில காட்சிகள் கோவை அடுத்த கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் எடுக்கப்பட்டது.

இதற்காக சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் அடங்கிய படக்குழுவினர் விமான மூலம் கோவை வந்தடைந்து பாலக்காடு சென்றனர்.

குறிப்பிட்ட காட்சிகளை படக்குழுவினர் எடுத்ததை அடுத்து இன்று இயக்குனர் நெல்சன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் சென்னை திரும்பினர்.

அதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த நடிகர் ரஜினியை அங்கிருந்து ரசிகர்கள் தலைவா என்று கூறி அழைத்து வரவேற்றனர்.