• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நீட் தேர்வு விலக்கு மசோதா-மத்திய அரசு மீண்டும் கடிதம்

ByA.Tamilselvan

Jan 19, 2023

நீட் தேர்வு விலக்கு மசோதா- தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு மீண்டும் மறுவிளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார். ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராயப்பட்டது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டசபையில் செப்டம்பர் மாதம் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது.
இந்த மசோதா தமிழக ஆளுநர் ஒப்புதலுக்கு முதலில் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி முதலில் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார். இந்த மசோதாவில் கையெழுத்திடாமல் அவையின் மறுபரிசீலனைக்கு ஆளுநர் அதை திருப்பி அனுப்பினார். பின்னர் பிப்ரவரி 8-ந்தேதி தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு அன்றைய தினமே ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் அந்த மசோதா மீதுஆளுநர்உடனே கையெழுத்திடவில்லை.
அதன் பிறகு நீட் விலக்கு மசோதாவை கவர்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். இப்போது நீட் விலக்கு மசோதா குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் மூலமாக தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டுமீண்டும் கடிதம் அனுப்பி உள்ளது.