• Fri. Apr 19th, 2024

கோட்டூர் கிராமத்தின் காவேரி கரையில் புதிய சம்ப் அமைக்க எதிர்ப்பு

ByJawahar

Jan 19, 2023

முசிறியை அடுத்த ஏவூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோட்டூர் கிராமத்தின் காவேரி கரையில் புதிதாக சம்பு ஒன்று கட்டப்பட்டு வருகிறது . ஏற்கனவே அங்கிருந்த சம்பு பழுது அடைந்து விழும் நிலையில் உள்ளதால் . புதிதாக சம்பு (நீர் ஏற்றி தள்ளும் தொட்டி) அமைக்கும் பணி கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது இந்த சம்புவிலிருந்து வேளாங்கநத்தம் , தண்டலை புத்தூர் , திருத்தலையூர் ஆகிய ஊர்களுக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது . புதிதாக கட்டப்பட்டு வரும் சம்புவிலிருந்து குடிநீர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் வரை கொண்டு செல்வதற்கு பணி மேற்கொள்கிறார்கள் என்றும் அவ்வாறு அனுப்பப்பட்டால் வறட்சி காலத்தில் கோட்டூர் பகுதியில் நீர்மட்டம் குறைந்து விடும் .
மேலும் இவ்வாறு பணி மேற்கொள்ளப்படுகிறது என்ற தகவலை ஊர் பஞ்சாயத்திற்கு தெரியப்படுத்தவில்லை என்ற காரணத்தினாலும், ஊராட்சி மன்ற தலைவர் சிவஞானம் (ஏவூர் ஊராட்சி மன்ற தலைவர்) தலைமையில் ஊர் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் பணி நடைபெறும் இடத்தில் கூடி புதிய சம்ப் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த முசிறி ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், காவல் துறையினர் அங்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.முடிவில் பிரச்சனை குறித்து ஆர்டிஓ மற்றும் கலெக்டருக்கு மனுவாக கொடுத்தால் அதை அவர்களின் பார்வைக்கு கொண்டு சென்று தீர்வு காணலாம் அதுவரை பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்க படும் எனவும் பிடி ஓ அளித்த உறுதியின் பேரில் போராட்டத்தை ஊர் பொதுமக்கள் தற்காலிகமாக கைவிட்டு கலந்து சென்றனர்.இந்த திடீர் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *