• Mon. Jul 13th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தமிழில் மீண்டும் நடிக்கும் நஸ்ரியா

தமிழில் நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நஸ்ரியா அதனை தொடர்ந்து அட்லி இயக்கத்தில்ராஜா ராணி, மற்றும் திருமணம் எனும் நிக்கா, நய்யாண்டி உள்பட பல படங்களில் நடித்தார் பகத் பாசிலுக்கும் நஸ்ரியாவுக்கும் திருமணம் நடைபெற்றபின்மலையாள படங்களில் மட்டுமே நடித்து வந்தார்தற்போது தெலுங்கில் நானிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் தமிழ் பதிப்புக்கு அடடே சுந்தரா என்று தலைப்பு வைத்துள்ளார்கள். இந்தப்படத்தின் டீசர் (ஏப்ரல் 20) இன்று வெளியாக உள்ளது. மேலும் இந்த படம் ஜூன் மாதம் பத்தாம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.