வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்து வரும் படம் விடுதலை. விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் ஜிவி.பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ நாயகியாக நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விஜய் சேதுபதியின் கால்சீட் காரணமாக நீண்டகாலமாக தாமதமாகிவந்தது ஒரு வழியாக விஜய்சேதுபதி விடுதலை படப்பிடிப்பை முடித்து கொடுக்க கால்ஷீட் ஒதுக்கியதால் விடுதலைபடத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 28ம் தேதி முதல் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.திண்டுக்கல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கிராமத்து செட்டுகளில் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.