• Sun. May 5th, 2024

தேசிய ஒருமைப்பாட்டு முகாம்.., மாணவ, மாணவிகள் பங்கேற்பு…

ByKalamegam Viswanathan

Dec 13, 2023

ஒன்றிய அரசின் இளைஞர் நலன் துறை சார்பில், தேசிய ஒருமைப்பாட்டு முகாம் – பல்வேறு மாநிலங்களில் இருந்து நாட்டு நலப் பணித்திட்ட மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஒன்றிய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் மூலம் , நாட்டில் உள்ள நாட்டு நலப்பணித்திட்ட  மாணவ , மாணவிகள் கலந்து கொள்ளும் தேசிய ஒருமைப்பாடு முகாம் 7 நாட்கள் நடைபெற்று வரும் நிலையில், 

 இம்முகாமில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா,  தெலுங்கானா, ஆந்திர பிரதேசம்,  ஒடிசா, மகாராஷ்டிரா,  மேற்கு வங்காளம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவியர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்கள் தேச ஒற்றுமை , தேச முன்னேற்றம் , கலாச்சார பரிமாற்றம் போன்றவற்றை வலியுறுத்தும்  விதமாக விழிப்புணர்வு பேச்சும், கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *