• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

மதுரை மாநகர் பனகல் சாலை பகுதியில் புதிய புறக்காவல் நிலையம் மாநகர காவல் ஆணையர் துவக்கி வைத்தார்…

ByKalamegam Viswanathan

Dec 13, 2023

மதுரை மாநகர் பனகல் சாலை பகுதியில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை அருகில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய புற காவல் நிலையத்தை மதுரை மாநகர் காவல் ஆணையாளர் இன்று துவக்கி வைத்தார். மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு, போக்குவரத்து ஆகியோர் உடன் இருந்தனர்.

  1. குற்றச் செயல்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை கண்காணிக்கும் விதமாகவும் 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
  2. பனகல் சாலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் இன்றி வாகனங்கள் நிறுத்துவதற்காக இலவச வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது.
  3. இந்த புறக்காவல் நிலையத்தில் குற்றங்களை தடுக்கும் விதமாக 24 மணி நேரமும் காவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகர காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.