மதுரை சேது பொறியியல் கல்லூரியில் உற்பத்தி மற்றும் தெர்மல் துறைகளில் தற்போது உலக அளவில் நடைபெறும் ஆராய்ச்சி மற்றும் சிறந்த தொழில்நுட்பங்கள் குறித்து தேசிய கருத்து அரங்கம் நடைபெற்றது
மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறை சார்பாக அகில இந்திய தொழில்நுட்ப கழகம் சார்பாக நிதி உதவி பெற்று இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் பிப்ரவரி 23ஆம் தேதி துவங்கியது .கருத்தரங்கு துவக்க விழாவை கல்லூரி நிறுவனர் மற்றும் தலைவர் முகமதுஜலீல் தலைமையில் ,கல்லூரி நிர்வாக அதிகாரிகள் சீனிமுகைதீன் சீனிமுகமதுஅலியார்மரைக்காயர், நாசியாபாத்திமா.,நிலாபர்பாத்திமா ஆகியோர் முன்னிலை வகுத்தனர் கல்லூரி முதல்வர் செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார் கருத்தரங்கில் மத்திய அரசின் டி ஆர் டி ஓ நிறுவனத்தின் முனைவர் ராமபிரபு .,சி .எஸ். ஐ ஆர் நிறுவனத்தின் முனைவர் சங்கரன்., முனைவர் பெண்டிக்ராகேஷ் ,சென்னை ஐஐடி பேராசிரியர் தன்மை பஸக், வேலூர் விஐடி பல்கலைக்கழக பேராசிரியர் கோவிந்தராசு ஆகியோர் வளர்ந்து வரும் இயந்திரவியல் துறை ஆராய்ச்சிகள் பற்றி விரிவாக எடுத்துரைக்க உள்ளனர்.
இயந்திரவியல் துறை சார்பாக துவக்கப்பட்ட கருத்தரங்கில் ,கருத்தரங்கு மலரை கல்லூரி முதன்மை நிர்வாக அதிகாரி எஸ்.எம் .சீனி மொகைதீன் இணை முதன்மை நிர்வாக அதிகாரி எஸ் .எம் .சீனி முகம்மது அலியார் வெளியிட்டனர் பின்னர் கருத்தரங்கத்தில்உற்பத்தி மற்றும் தெர்மல் துறைகளில் தற்போது உலக அளவில் நடைபெறும் ஆராய்ச்சி மற்றும் சிறந்த தொழில்நுட்பங்கள் குறித்து இந்த தேசிய கருத்து அரங்கம் நடைபெற்றது இக்கருத்தரங்கில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், இந்தியாவின் தலைசிறந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் ,ஐஐடி சென்னை மற்றும் இந்திய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் , பேராசிரியர்கள் தங்களின் ஆய்வு கட்டுரை கட்டுரைகளை சமர்ப்பிக்கிறார்கள். கருத்தரங்கு ஏற்பாட்டை துணை முதல்வர் சிவக்குமார் தலைமையில் இயந்திரவியல் துறை தலைவர் முத்துசுவாமி பேராசிரியர்கள் கைலாச கைலாசநாதன் ,அருண் பாலசுப்பிரமணியம், பரமசுவாமி மற்றும் துறை பேராசிரியர்கள் மாணவர்கள் செய்திருந்தனர் .