• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தென்காசியில் தேசிய நூலக வார விழா புத்தக கண்காட்சி தொடக்கம்

பள்ளிக்கல்வித் துறை, தென்காசி வ.உ.சி.வட்டார நூலகம், ரோட்டரி கிளப் ஆப் சக்தி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் எலைட் இணைந்து நடத்தும் 54வது தேசிய நூலக விழா மற்றும் புத்தக கண்காட்சி தொடங்கியது.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் தலைமை வகித்தார். பெரும்புரவலர் வல்லம்; தொழிலதிபர் அரிமா பாலகிருஷ்ணன் மாவட்ட நூலக ஆய்வாளர் கணேசன், நகரச் செயலாளர் சாதிர், மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர் வெற்றிவிஜயன், ராஜகோபாலபேரி கவுன்சிலர் நான்சி, ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சக்தி தலைவர் கிருஷ்ணவேணி, ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் எலைட் தலைவர் ஜெகமோகன், வாசகர் வட்ட துணைத்தலைவர் முகைதீன் முன்னிலை வகித்தனர். வட்டார நூலகர் பிரமநாயகம் வரவேற்றார்.

தென்காசி பாலாஜி மருத்துவமனை இந்திய மருத்துவ கழக தலைவர் டாக்டர்.பாலாஜி முதல் விற்பனையை பெற்றுக்கொண்டு, ரூ.5000-வழங்கி பெரும்புரவலராக இணைந்து கொண்டார்கள். மேலும் ரூ.5000 மதிப்புள்ள இரண்டு சீலீங் பேன்p வழங்கினார். நகர செயலாளர் சாதிர் அவர்கள் 333 உறுப்பினர்களுக்கான தொகையை வழங்கினார். விழாவில் வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன், இளமுருகன், தமிழ்நாடு அரசு அலுவலக ஒன்றிய மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், தென்காசி கேன்சர் சென்டர் நிர்வாக இயக்கினர் பாரதிராஜா, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் மாவட்ட பொருளாளர் ராஜாராம் வாழ்த்துரை வழங்கினார்கள். முதல் நாள் நிகழ்ச்சியில் ஓவியப் போட்டியில் பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஜீலியாராஜசெல்வி, நிஹ்மத்துன்னிஸா, ராஜேஸ்வரி, வாகர் வட்ட நிர்வாகிகள், குழந்தையேசு, சலீம், முருகேசன் ஆகியோர் செய்தனர்.