உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கடையநல்லூரில் சிலம்பம் போட்டி நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசளிப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இன்று கடையநல்லூரில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் ஈஸ்வரன், தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லத்துரை, மன்ற துணை தலைவர் முத்துக்குமார், மாவட்ட துணைசெயலாளர் வீரா முத்துசாமி, சுப்பையாபுரம் சங்கர், மதன், பஞ். தலைவர் இன்பராஜ், கடையநல்லூர் மன்ற நகர பொருளாளர் யோகேஷ், உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.