• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

நாசருக்கு கிடைத்தது கோல்டன் விசா!

பிரபல நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான நாசருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது.

தமிழ் உட்பட இந்திய திரையுலகினர் பலருக்கும் ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் சார்பில் கோல்டன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான நாசருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இந்த கோல்டன் விசாவை வைத்திருப்பவர்கள் ஐக்கிய அமீரகத்தில் குடிமகன்களாக 10 ஆண்டுகளுக்கு கருதப்படுவார்கள். சமீபத்தில்தான் தமிழ் நடிகர் விஜய் சேதுபதி, மீனா உள்ளிட்ட பலருக்கும் ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியது குறிப்பிடத்தக்கது.