• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

ரிலீசுக்கு முன்பே அதிக வசூலில் ‘நானே வருவேன்’…!

Byவிஷா

Sep 19, 2022

நடிகர் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அதிக வசூலில் இடம் பிடித்திருப்பதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், எல்லி அவ்ரம் உள்ளிட்டோர் நடித்திருக்கும் நானே வருவேன் படம் செப்டம்பர் 29ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. படத்தை இயக்கியிருப்பதுடன் நடிக்கவும் செய்திருக்கிறார் செல்வராகவன்.
தனுஷ் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருப்பதால் நானே வருவேன் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது. ரூ. 35 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் நானே வருவேன் படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூ. 25 கோடிக்கு வாங்கியிருக்கிறது அமேசான் பிரைம் நிறுவனம். மேலும் படத்தின் சாட்டிலைட் உரிமையை ரூ. 18 கோடி கொடுத்து வாங்கிவிட்டது சன் டிவி. ஆக, போட்ட பணத்தை ஏற்கனவே எடுத்துவிட்டார்கள்.
செல்வராகவன், தனுஷ் கூட்டணி வெற்றிக் கூட்டணி ஆகும். அதனால் நானே வருவேன் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.
தனுசுக்கு நல்ல காலம் ஆரம்பித்துவிட்டது என்கிறார்கள் ரசிகர்கள். மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி ரிலீஸான திருச்சிற்றம்பலம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து வெளியாகவிருக்கும் நானே வருவேனும் கண்டிப்பாக ஹிட் தான் என்கிறார்கள் ரசிகர்கள். நானே வருவேன் ரிலீஸான மறுநாளே மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் ரிலீஸாகவிருக்கிறது. பொன்னியின் செல்வனால் தனுஷ் படத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.