• Sun. Jun 28th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சை தவிர்க்க வேண்டும்-சீனிவாசன் பேட்டி..,

ByS.Ariyanayagam

Feb 15, 2026

திண்டுக்கல்லில் அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பில் பா.ஜ.க மாநிலத்தலைவர் நைனார் நாகேந்திரன் சர்சை பேச்சு தவறுதான் தனிப்பட்ட கருத்துகளை தவிர்க்க வேண்டும் – திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

பா.ஜ.க பற்றி தவறாக பேசிய செங்கோட்டையன் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் பா.ஜ.க தலைவர்களான அமிர்ஷா, நிர்மலா சீத்தாராமன் போன்றவர்களை பார்க்கும் பொழுது பெரிய கட்சி என தெரியவில்லையா.

முதல்வர் தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளை கலந்து கொள்கிறார். வள்ளலார் தினத்தில் வள்ளலார் போன்ற நாடு உள்ளது எனவும் வ.உ.சி தினம் என்றால் வ.உ.சி் நாடு என்பார். விஜய் சேலம் பரப்புரையில் உயிரிழந்த குடும்பத்திற்கு 5 லட்சம் பிச்சைகாசு கொடுக்க வேண்டாம். கரூர் போல குடும்ப செலவு, கல்வி என தர வேண்டும். விஜய் அரசியல் ஆண்மை இருந்தால் எம்.ஜி.ஆர், அண்ணா போன்ற புகைப்படங்களை தவிர்த்து போட்டியிட வேண்டும்.

தமிழக முதல்வர் மகளிர் உரிமைத்தொகை ரூ 5000 நமது வீட்டு பணத்தை எடுத்து நமக்கு கொடுப்பது ஏமாற்று வேலை. அதிமுக நிர்வாகிகள் திமுகவிற்கு ஆதாயத்தல் மட்டுமே செல்கின்றர்கள். இவ்வாறு அவர் கூறினார்.