கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் நாகர்கோவில் மண்டலத்தில் 2018 முதல் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு உரிய வரவு செலவு கணக்கு குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் முன்னேற்ற இயக்கத்தினர் தகவல் பெற்றனர்.
இதன் அடிப்படையில் இன்று இந்த சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வரவு செலவுகள் தணிக்கை அறிக்கை பராமரிக்கப்படவில்லை. இதனால் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
எனவே, இதுகுறித்து உடனடியாக லஞ்ச ஒழிப்பு துறை மூலமாக விசாரணை நடத்தி ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.