• Tue. Dec 10th, 2024

நாகர்கோவில் ஜேசிபி இயந்திரம் திடீரென கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்ததால் பரபரப்பு

Byகுமார்

Sep 23, 2021

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்றுவருகிறது.

அந்தவகையில் கன்னியாகுமரி- பார்வதிபுரம் சாலையில் குழி தோண்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று இரவு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே குழி தோண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஜே.சி.பி எந்திரம் திடீரென கவிழ்ந்து 10 அடி பள்ளத்தில் விழுந்தது.

இதில் ஓட்டுநர் அதிஷ்டவசாமாக உயிர்தப்பினார். இரவு நேரம் என்பதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஜே.சி. பி எந்திரத்தை மீட்க கிரையின் வசதி ஏற்பாடு செய்யாததால் வேறு ஒரு ஜேசிபி எந்திரம் மூலம் பள்ளத்திலிருந்து ஜேசிபி எந்திரத்தை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது.

மேலும் இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.