மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 விவசாய சட்டங்கள், அதேபோன்று தொழிலாளர் விரோத சட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் இதை அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க எடுத்துக்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை கண்டித்து நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
விவசாய சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 11 மாதங்களாக போராட்டத்தில் இருந்து வருகின்றனர்.
உலக அளவில் கவனத்தை ஈர்த்த இந்த போராட்டத்தை மத்திய பாஜக அரசு கண்டுகொள்ளவில்லை.
எனவே மத்திய பாஜக அரசை கண்டித்து நாடு தழுவிய அளவில் தொழிற்சங்கங்கள் தொழிலாளர் அமைப்புகள் இணைந்து வரும் 27ஆம் தேதி நாடு தழுவிய அளவில் பந்த் மறியல் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அந்த நிகழ்ச்சியின் முன்னோட்டமாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் நாகர்கோவில் ராமன்புதூர் சந்திப்பில் இன்று காலை துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கும் வர்த்தக நிறுவனங்களுக்கும் வீதி வீதியாக சென்று வழங்கி தெருமுனை பிரச்சாரம் தொடங்கி உள்ளனர்.
இன்றிலிருந்து இருபத்தி ஆறாம் தேதி வரை மாவட்டம் முழுவதும் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளனர் .
மத்திய பா.ஜ.க அரசு இந்த சட்டத்தை நிறைவேற்றி அமுல்படுத்தினால் விவசாய்கள் தாங்கள் விளைவித்த பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை கூட பறிக்க பட்டு கார்பரேட் நிறுவங்களின் கையில் போய் விடும் என குற்றம் சாட்டினார்கள்.