• Fri. Mar 20th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் இன்று மோதும் ஐ. பி. எல் திருவிழா

கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் வரபெற்பு பெற்றது ஐ. பி. எல். 14வது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி முதல் பாதி ஆட்டங்கள் நடைபெற்று வந்தது. கொரோனா காரணமாக இந்த ஆட்டம் பாதியில் ஒத்திவைக்கப்பட்டன. இச்சூழ்நிலையில், 2-வது பாதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டு தற்போது போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

இந்த நிலையில், ஐ. பி. எல் எப்போதுமே பெரிதும் எதிர்பார்க்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இரு அணியின் வீரர்களும் துபாயில் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை 30 ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், புள்ளிகள் பட்டியலில் டெல்லி முதலிடத்திலும், சென்னை 2-வது இடத்திலும் உள்ளது. விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி 3-வது இடத்திலும் உள்ளது. வருகிற 27 நாட்களில், 31 ஆட்டங்கள் நடைபெறவிருக்கும் நிலையில், போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகின்றன.