• Fri. Apr 26th, 2024

மீண்டும் தொடங்க உள்ள IPL

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டு, இப்போது மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.
இந்தியாவில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் மீதமிருக்கும் போட்டிகள் அமீரகத்தில் இருக்கும் அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா மைதானங்களில் நடைபெற இருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் 30-ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை – சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன.

இதுவரை நடந்துள்ள போட்டிகளின் அடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் இந்த போட்டி தொடருகிறது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 6-இல் வெற்றிப்பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ், 7 போட்டிகளில் விளையாடி 5 இல் வெற்றிப்பெற்று 10 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, இதுவரை 7 இல் 5 இல் வெற்றிப்பெற்று 10 புள்ளிகளுடன் பட்டியலில் 3 ஆம் இடத்தில் இருக்கிறது கோலி தலைமயிலான ஆர்சிபி.
நடப்பு சாம்பியனும் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை அணி இம்முறை சற்று தடுமாற்றமாவே இருக்கிறது. இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 3 இல் தோல்வி 4 இல் வெற்றிப்பெற்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் 4 ஆம் இடத்தில் இருக்கிறது.
ராஜஸ்தான் அணி,6 புள்ளிகள் பெற்று, பட்டியலில் 5 ஆம் இடத்தை பிடித்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6 ஆம் இடத்தில் இருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7ஆம் இடத்திலும், பட்டியலில் கடைசி இடம் பிடித்திருக்கிறது ஹைதராபாத் அணி.
மேற்கொண்டு அமீரகத்தில் நடக்கவிருக்கும் போட்டி வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *