மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு நிறுவனங்கள் மட்டுமல்ல தனியார் நிறுவனங்களிலும் 5 சதவிகித வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசினுடைய வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கூட மாற்றுத் திறனாளிகளுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை என மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் வேதனை தெரிவித்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர.; இதில் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர.; தனியார் நிறுவனங்கள் தொழிற்சாலைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், அரசு நிறுவனங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 4 சதவீத வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படவில்லை என்பதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பொதுத்துறை நிறுவனங்களை தற்போது தனியாருக்கு தாரை வார்த்து வருவதால் 5 சதவிகித வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு முழுமையாக அறிவிக்கப்பட்டு அதை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர்.
விசுவல்
- நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் சங்க ஆர்பாட்டம்.
- பேட்டி சார்லஸ் ( மாவட்ட தலைவர் – கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் )