• Sun. Jul 26th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா- கடுமையான கட்டுப்பாடுகள் அமல்…

சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து லான்ஜோ நகரிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இன்று 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்திருக்கிறது அந்நாட்டு அரசு. இதனால், மீண்டும் கொரோனா பரவல் அங்கு தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில் சுமார் 4 மில்லியன் மக்கள் வசிக்கும் சீனாவின் வடமேற்கு நகரமான லான்ஜோவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அத்தியாவசிய தேவைகள் தவிர பொதுமக்கள் வெளியே நடமாடக் கூடாது எனவும், அனைத்து வேலைகளும் வீட்டிலிருந்தபடிதான் செய்யவேண்டும் எனவும் உத்தரவிட்டிருக்கிறது. இதுமட்டுமின்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனாவின் மங்கோலியா நகரிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிட்ட தக்கது.

தற்போது சீனாவில் மீண்டும் கொரானாவின் தாக்கம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருவது உலக நாடுகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.