• Mon. Apr 29th, 2024

பெரம்பலூர் வேட்பாளராக என்.டி. சந்திரமோகனை அறிவித்துள்ளார் – சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி

Byதி.ஜீவா

Mar 26, 2024

கழகப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளராக என்.டி. சந்திரமோகனை அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் கழக செயல் வீரர் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் பெரம்பலூர் அருகே உள்ள துறைமங்கலம் தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் பெரம்பலூர் நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களான கழக எம்ஜிஆர் இளைஞரணி செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான என்.ஆர்.சிவபதி,கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான ப.மோகன், பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை.இரா. தமிழ்ச்செல்வன் , முன்னாள் அமைச்சரும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளருமான பரஞ்சோதி, முன்னாள் அமைச்சரும்,கழக அமைப்பு செயலாளருமான வரகூர். அருணாச்சலம், கழக கொள்கை துணை பரப்பு செயலாளர் இளவரசன், அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி.ராசு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூவை. செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சரும் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளருமான என்.ஆர்.சிவபதி பெரம்பலூர் தொகுதியில் எதிரணியில் போட்டிடுகின்ற இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பாரிவேந்தர் கடந்த ஐந்தாண்டுகளில் பெரம்பலூர் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை எனவும் கடந்த தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றதை போல இந்த தேர்தலிலும் பொய்யான வாக்குறுதியை கொடுத்து வெற்றி பெற முயற்சிக்கிறார் எனவும் எனவே மக்கள் சிந்தித்து அதிமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் என்.டி.சந்தரமோகனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

பின்னர் பேசிய முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளருமான ப.மோகன் அதிமுகவிற்கு துரோகம் செய்ய நினைத்தவர்களும் இந்த கட்சியை அழிக்க நினைத்தவர்களும் தற்போது இங்கு இல்லை எனவும் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் வெற்றி வேட்பாளர் என்.டி.சந்திரமோகனை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வைக்க வேண்டுமென தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *