

சிவகங்கை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அஇஅதிமுக வேட்பாளர் சேவியர் தாஸுக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் எம் எல் ஏ, முன்னாள் அமைச்சர்கள் பாஸ்கரன், திருமயம், ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மாவட்ட கழக செயலாளர் தமிழக விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனையான காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை புரட்சி தமிழர் எடப்பாடி பழனிசாமி 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கி நடந்து வந்தது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் வறட்சியால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் குறிப்பாக சிவகங்கை இராமநாதபுரம் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பயன் பெறுவார்கள்.


திமுக அரசு இந்த திட்டத்தை கை விட்டுள்ளனர் . இதுகுறித்து காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் கூட்டணி கட்சியான திமுக விடம் இத்திட்டத்தை செயல்படுத்த அக்கறை காட்டவில்லை. மேலும் தமிழக மக்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா அமைப்புக்கு ஆதரவாகவும், தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை குழிதோண்டி புதைத்து நீட் தேர்வுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜரானவர் கார்த்திக் சிதம்பரத்தின் தாயார் இப்படி தமிழகம் மட்டுமல்ல இந்திய மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிராக உள்ளவர்கள். புரட்சி தலைவி அம்மா அவர்களை பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதற்கு கருணாநிதிக்கு எவ்வளவு பங்கு உள்ளதோ அதே அளவு முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு உண்டு. அம்மாவின் ஆன்மா சாந்தியடைய சிதம்பரம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை, சிவகங்கை தொகுதியில் இருந்து அப்புறப்படுத்தி சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த சாமானியன் சேவியர் தாஸை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசினார்.

