• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தம்பி மரணத்தில் மர்மம்! அண்ணன் புகார்!

பொள்ளாச்சி, திப்பம்பட்டியைச் சேர்ந்தவர் மயில்சாமி! இவரது தம்பி ஆறுச்சாமியின் உடல், கடந்த 26ம் தேதி சின்னதங்கம் கவுண்டர் தோட்டம் அருகில் உள்ள தடுப்பு அணையில் கண்டுபிடிக்கப்பட்டது! கோமங்கலம் காவல் நிலையதிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஆறுச்சாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது!

இந்நிலையில், தனது தம்பி கடந்த மூன்று வருடங்களாக சின்ன தங்கம் கவுண்டர் தோட்டத்தில் பணிபுரிந்து வந்ததாகவும், அவருக்கு நீச்சல் நன்றாக தெரியும் என்றும், எனவே ஆறுச்சாமி இறப்பில் மர்மம் உள்ளதாக, அவரது அண்ணன் மயில்சாமி மற்றும் உறவினர்கள் பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணியிடம் புகார் கொடுத்ததோடு, உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்!