வெள்ளக்கல் கழுங்கடி முனியாண்டி கோவிலுக்கு நேர்த்திக்கடனாக விடப்பட்ட ஆடுகளை திருடிச் செல்லும் மர்ம நபர்கள் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திள்ளது.
மதுரை விமான நிலையம் செல்லும் சாலை அருகே உள்ள வெள்ளக்கல் பகுதியில் அமைந்திருக்கும் கழுங்கடி முனியாண்டி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறும். அப்போது கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட ஆடுகளை பலியிட்டு சுமார் 10,000 மேற்பட்டோருக்கு காலை முதல் மாலை வரை சமபந்தி விருந்து நடைபெற்று வருவது வழக்கம்.
அந்த வகையில் மதுரை வெள்ளைக்கல் முனியாண்டி கோவில் திருவிழா கடந்தாண்டு நடைபெற்று முடிந்த நிலையில், திருவிழாவின் போது அப்பகுதி மக்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வருகை தரும்.
பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றிய முனியாண்டி சுவாமிக்கு நேர்த்திக்கடனாக சுமார் 107க்கும் மேற்பட்ட ஆடுகள் விடப்பட்டது. இந்த நிலையில் 15 ஆடுகள் உடல்நிலை குறைவால் உயிர் இழந்த நிலையில் மீதம் 92 ஆடுகள் ஆட்டு கொட்டகையில் வைத்து வளர்க்கப்பட்டு வந்த நிலையில்,
கடந்த 7ஆம் தேதி 10 ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்கள் அதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் சுமார் 2 ஆடுகளை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,
ஆடுகளை திருடிச் செல்லும் மர்ம நபர்கள் யார் என்று தெரியாத நிலையில் வெள்ளக்கல் முனியாண்டி கோவிலில் நேர்த்திக்கடனாக விடப்பட்ட ஆட்டுகளை தொடர்ச்சியாக திருடி செல்லும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஊர் மக்கள் சிசிடிவி காட்சிகளுடன் அவனியாபுரம் காவல் நிலையத்தில், புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.