• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

என்னுடைய ரோல்மாடல் அப்பாதான் விஷ்ணு விஷால்..

BySeenu

Jun 30, 2025

நடிகர் விஷ்ணு விஷால் தயாரிப்பில் இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் நடிகர்கள் ருத்ரா(விஷ்ணு விஷாலின் உறவு முறை தம்பி), விஷ்ணு விஷால், கருணாகரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள Oho Enthan Baby திரைப்படம் ஜூலை 11ம் தேதி வெளியாக உள்ளது. அதனை முன்னிட்டு அப்படக்குழுவினர் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கலை அறிவியல் (தனியார்) கல்லூரியில் மாணவர்களுடன் கலந்துரையாடினர். அப்போது இந்த திரைப்படம் குறித்தும் திரைப்படத்தின் அனுபவங்கள் குறித்தும் கலந்துரையாடி மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்தனர்.

அப்போது ஒரு மாணவி விஷ்ணு விஷாலிடம் உங்களது இன்ஸ்பிரேஷன் யார்? என்று கேட்டார்தற்கு பதில் அளித்த விஷ்ணு விஷால், என்னுடைய இன்ஸ்பிரேஷன் எனது அப்பா தான் எங்களுடைய குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் உணவு உண்பதற்கு கூட காசு இருக்காது. ருத்ராவின் அப்பா அவருடைய படிப்பை விட்டு விட்டு கூலி வேலை செய்து என்னுடைய அப்பாவை படிக்க வைத்தார். என்னுடைய அப்பாவும் படித்து ஐபிஎஸ் ஆனார். அதனால்தான் என்னுடைய அப்பா தான் என்னுடைய ரோல் மாடல் என தெரிவித்தார்.