• Sat. Oct 12th, 2024

கோவில் கட்ட நன்கொடை அளித்த முஸ்லீம் தொழில் அதிபர்…

Byகாயத்ரி

Mar 23, 2022

பீகார் மாநிலம், கிழக்கு சம்பரான் மாவட்டம் கைத்வாலியா பகுதியில், உலகின் மிகப்பெரிய இந்து கோவிலாக விராட் ராமாயண் மந்திர் கட்டப்பட உள்ளது. இதற்கான பணிகளை பாட்னாவைச் சேர்ந்த மஹாவீர் மந்திர் அறக்கட்டளை மேற்கொள்கிறது.

உயரமான கோபுரங்களுடன் 18 கோவில்களும், சிவன் கோவிலில் உலகின் மிகப்பெரிய லிங்கமும் அமைக்கப்பட உள்ளது. இதற்காக அறக்கட்டளை சார்பில் 125 ஏக்கர் நிலம் பெறப்பட்டு உள்ளது. அசாமின் கவுகாத்தியில் தொழில் அதிபராக இருக்கும் கிழக்கு சம்பரான் மாவட்டத்தைச் சேர்ந்த இஷ்தியாக் அகமது கான் என்பவர் 2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கி உள்ளார். இதுகுறித்து, அறக்கட்டளை தலைவர் ஆச்சார்யா கிஷோர் குணால் கூறியதாவது: “இஷ்தியாக் மற்றும் அவரது குடும்பத்தினர் வழங்கியுள்ள நன்கொடை, இரு சமூகத்தினர் இடையிலான சகோதரத்துவம் மற்றும் மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. அவர்களின் உதவி இல்லாவிட்டால், இந்த கனவுத் திட்டம் நிறைவேறுவது கடினமாக இருந்திருக்கும்” எனத் தெரிவித்தார். கிழக்காசிய நாடான கம்போடியாவின் அங்கோர் வாட் ஆலயம் உலகின் மிகப்பெரிய ஆலயம் என பெயர் பெற்றுள்ளது. ஆனால், விராட் ராமாயண் மந்திர் அதைவிட உயரமாக, 500 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *