கேரளத்தின் நிர்பந்தம் காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர் இருப்பை குறைத்திருக்கும் திமுக அரசைக் கண்டித்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத் தலைநகரங்களில் நவம்பர் 9ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது. இது குறித்த கூட்டம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், ஐந்து மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனையான முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரம் வரை நீரை தேக்கவும், தமிழகத்தின் வாழ்வாதார உரிமை பிரச்சினையான முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரள அமைச்சர்களும் அதிகாரிகளும் தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்தும், இதை தடுக்க முயலாத கையாலாகாத திமுக அரசை கண்டித்தும், வரும் 9ஆம் தேதி நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு கழக மக்களவை தலைவர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத், தேனி மாவட்ட கழக செயலாளர் SPM.சையதுகான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆர்.பார்த்திபன் மாவட்ட கழக அவைத் தலைவர் ஜி.பொண்ணுபிள்ளை, கழகப் பொதுக்குழு உறுப்பினர் டிடி.சிவகுமார், மாவட்ட கழக பொருளாளர் சோலைராஜ், மாவட்டக் கழக துணைச் செயலாளர் வசந்தா நாகராஜ், தேனி ஒன்றிய கழகச் செயலாளர் ஆர்டி.கணேசன், தேனி நகர கழக செயலாளர் T.கிருஷ்ணகுமார், பிசி பட்டி பேரூர் கழக செயலாளர் ப.தீபன்சக்கரவர்த்தி மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் நகர ஒன்றிய பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், கழக பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.