பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், முல்லையாக நடித்து வருபவர் நடிகை காவ்யா அறிவுமணி! பாரதி கண்ணம்மா தொடரிலும் நடித்து வருகிறார்! இந்நிலையில் இவர் தற்போது வெள்ளித்திரையிலும் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
சீரியல்களில் நடித்து அதன்மூலம் கிடைக்கும் புகழ் மூலமாக, வெள்ளித்திரைக்கு சென்ற நடிகைகள் பலர்! அந்த வரிசையில், நடிகை காவ்யா அறிவுமணி விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரில் அறிமுகமானார். அந்த தொடரில் அறிவு என்ற கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு பரவலாக ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவருக்கு தற்போது வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவரே அப்டேட் தெரிவித்துள்ளார். நடிகர் மகேந்திரன் நடிப்பில் அருண் கார்த்திக் இயக்கவுள்ள புதிய படமான ‘ரிப்பப்பரி’ படத்தில்தான் இவர் தற்போது இணைந்துள்ளார்.
இது மட்டுமின்றி டாம் அண்ட் ஜெர்ரி என்ற வெப் தொடரிலும் இவர் கமிட்டாகியுள்ளார். இது மட்டுமின்றி தனது சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து பிசியாக போட்டோஷுட் புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறார்!