காதலர் தினத்தை முன்னிட்டு மியூசிக் வீடியோ ஒன்றை தயாரிக்கும் பணியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ளார். ஐதராபாத் ஓட்டல் ஒன்றில், மியூசிக் வீடியோ பற்றிய விவாதத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் குழுவினருடன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது. காதலர் தினத்தையொட்டி வெளியாகவுள்ள இப்பாடல் காதலர்களை கவரும் வகையில் உருவாக்கப்படவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நட்சத்திர தம்பதிகளான ஐஸ்வர்யா, தனுஷ் பிரிவதாக கடந்த வாரம் அறிவித்து இருந்தனர். 18 ஆண்டுகள் மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்த்து வந்த இவர்களின் இந்த திடீர் முடிவு ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரிவுக்கு எந்த காரணம் என்பது தெரியாததால், இணையத்தில் பலவிதமான வதந்திகள் பரவி வருகின்றன. எந்த வதந்திக்கும் பதில் அளிக்காமல் இருவரும் அமைதியாகவே உள்ளனர்.
இந்நிலையில், ஐஸ்வர்யா இயக்குனர் வேலையில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.. டிப்ஸ் தயாரிக்கும் மியூஸிக் வீடியோ ஆல்பம் ஒன்றை இயக்குகிறார். இதற்கான ப்ரீ புரொடக்ஷன் பணியை ஹைதராபாத்தில் அவர் தொடங்கியுள்ளார். தனது குழுவினருடன் அவர் ஆலோசனை செய்த புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மியூசிக் வீடியோ படப்பிடிப்புகள் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நாளை துவங்க உள்ளது. மியூசிக் வீடியோவில் நடிக்க உள்ள நடிகர்கள் மற்றும் பணியாற்றும் குழுவினரை இறுதிசெய்யும் பணியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ளார். பே பிலிம்ஸ் சார்பில் வெளியிடப்படவுள்ள மியூசிக் வீடியோ காதலர் தினத்தில் வெளியாக உ ள்ளது.
நடிகர் தனுஷ், வாத்தி படப்பிடிப்புக்காக ஐதராபாத்தில் இருக்கிறார். ஐஸ்வர்யாவும் தனது பட வேலைகளுக்காக அங்கு தான் இருக்கிறார். இருவரும் ஒரே ஹோட்டலில் தான் தங்கி இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்!