ஒற்றுமையாக வாழும் அனைத்து சமுக மக்களின் மத்தியில் பகை உணர்வை ஏற்படுத்தும் பாஜாகவின் பொய் பிரச்சாரத்திற்கு எதிராக திமுக கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவில்.சமயமாநாடு தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையால் சிறப்பாக நடத்த இருப்பதாக கடந்த (பெப்12) அன்று பத்திரிகைகளில் செய்தி வெளியானது,இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரின் அறிக்கை மூலம் குமரி மாவட்ட மக்கள் தெரிந்துக் கொண்டுள்ள நிலையில். கடந்த காலங்களில் ஹைந்துவ ஹிந்து சேவா சங்கம் என்ற தனி அமைப்பு.மண்டைக்காடு பகவதியம்மன் பெயரில் ஆண்டு தோறும் கோடிக்கணக்கில் நன்கொடை வசூலித்து நடத்தி வந்தை தடுக்கவும்.மண்டைக்காடு பகவதி பெயரில் வசூல் நடத்தியதாக வெளிவந்த குற்றச்சாட்டின் அடிப்படையில்.அத்தகைய போலி வசூலில் ஒரு கூட்டம் கமிஷன் பெற்றுவந்த தை தடுக்கவே.இந்த ஆண்டு முதல் இந்து அறநிலையத்துறை சார்பில் மாசிக்கொடை 10நாட்களும் இந்து சமய மாநாட்டை சிறப்பாக நடத்த இருக்கும் நிலையில்.
குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பாஜக சார்பில் சமுக வலைத்தளங்கள் மற்றும் சுவர் ஓட்டிகள் மூலமாக.இந்த ஆண்டு இந்து சமய மாநாடு நடைபெற அரசு தடை விதித்துள்ளது என்ற பொய்யை பரப்பி சமுகத்தின் அமைதியை கெடுத்து கலவரம் ஏற்படுத்தும் நோக்கில்.மாவட்டத்தின் பல இடங்களில் போக்குவரத்துக்கு இடை ஊராக சாலை ஓரங்களில் கூடி போராட்டம்நடத்தினர். குமரி மாவட்டத்தில் மதமாச்சரியம் இன்றி ஒற்றுமையாக வாழும் அனைத்து சமுக மக்களின் மத்தியில் பகை உணர்வை ஏற்படுத்தும் செயலை திட்டமிட்டு செய்துவரும்.குமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் மற்றும் அவருடன் உள்ள சிலர் திட்டமிட்டே செயல்படுவர்கள் மீது வழக்கு பதிவு செய்து.பொது சமுகத்தின் நலம் கருதி காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என் கன்னியாகுமரி காவல் நிலைய ஆய்வாளரிடம்.அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு மற்றும் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி.ஸீடிபன் ஆகியோருடன் பல்வேறு பொருப்பாளர்களும் புகார் கொடுத்தனர்.