கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து ஆப்பகுதியில் வன ஆலுவலர்கள் கேமிரா பொருத்தி ஆய்வு செய்து வருகின்றனர்.
தக்கலை அருகே சரள்விளை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர், கன்னியாகுமரி கோட்டம் அவர்களின் உத்தரவு படி வேளிமலை வனச்சரக அலுவலர் தலைமையில் வனப்பணியாளர்கள் அப்பகுதியை ஆய்வு செய்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறிய இரு கேமிராக்களை பொருத்தினர்.மேலும் அவ்விடத்தினை வனக்காப்பாளர் கிருஷ்ணன் குட்டி மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர் பாலசுப்ரமணி ஆகியோர் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது