• Sat. Apr 26th, 2025

பிரதமர் மோடி சந்திப்பை புறக்கணித்த எம்.பி. மாணிக்கம் தாகூர்

ByKalamegam Viswanathan

Apr 6, 2025
மதுரை வரும் பிரதமர் மோடியை சந்திக்கும் நிகழ்ச்சியினை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.மாணிக்கம் தாகூர் புறக்கணித்தார்.

சிறுபான்மையினக்கு எதிரான வக்பு வாரிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி வரவேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

ராமேஸ்வரம் புதிய செங்குத்து ரயில் பாலத்தை திறந்து வைக்க வந்த பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் மதுரை வருகிறார். மதுரையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

மதுரை வரும் பிரதமர் மோடியை வரவேற்கும் குழுவில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி. டி. ஆர் தியாகராஜன் மதுரை விமான நிலைய ஆலோசனை குழு தலைவரும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் பெயரும் இருந்தது.

தற்போது விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பிரதமர் மோடி வரும் நிகழ்ச்சியை புறக்கணித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.