
நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்தால் தமிழகம் பாதிக்கப்படும் என
சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம் பேட்டி அளித்தார்.
சிவகங்கை நகராட்சிக்குப்பட்ட பகுதியில் அமைந்துள்ள ராணி ரெங்கநாச்சியார் பேருந்து நிலைய விரிவாக்க பணிக்கு பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விரிவாக்க பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆசா அஜித் தலைமையில் சிவகங்கை தொகுதி எம்பி கார்த்திக் சிதம்பரம், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

பின்னர்செய்தியாளர்களை சந்தித்து சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் பேசுகையில்..,
ஓராண்டை கடந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழக வெற்றி கழகம் இன்னும் பல ஆண்டுகளைக் கடக்க நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். தமிழக முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் , இதனை தமிழக அரசிடம் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளதாகவும், தமிழக அரசு விரைவில் மருத்துவர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவார்கள். அப்போது இதற்கு தீர்வு ஏற்படும் என்றார். மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்தால் தமிழகம் பாதிக்கப்படும். இதற்கு தமிழக முதல்வர் அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததை வரவேற்கிறேன்.

இக்கூட்டத்தில் ஒரு கட்சியைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பிரதிநிதித்துவம் அளிப்பதற்கு தமிழ்நாட்டின் மீது பற்றுக் கொண்டிருக்கின்ற எந்த ஒரு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றார். மேலும் பிரசாந்த் கிஷோர் பணத்திற்காக ஆலோசனை வழங்குபவர். அவரது செயல்பாடுகள் அவரது கட்சிக்கு எடுபடுகிறதா எனப் பார்க்க வேண்டும். பாஜகவிற்கு அரசியல் சாசனம் என்பது 75 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் எழுதப்பட்டது. அதற்கு முன்னர் எழுதிய மனுநீதி சட்டத்தின் மூலம் இந்தியாவை ஆள வேண்டும் என சித்தாந்தத்தில் உள்ளனர். ஆதலால் பாஜகவினர் என்றுமே அம்பேத்கரை மதிக்க மாட்டார் என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.
