• Fri. Apr 26th, 2024

கன்னியாகுமரியில் எம்.பி., 2 எம்.எல் ஏக்கள் கைது

ரயில் மறியிலில் ஈடுபட்ட கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் மற்றும் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது மற்றும் அவர் குடியிருப்பை அவசரமாக காலி செய்ய வைத்த சபாநாயகரின் செயலை கண்டித்து இன்று (ஏப்ரல் 15)ம் தேதி.நாகர்கோவில் சந்திப்பு இரயில் நிலையத்தில் குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், இரணியல் இரயில் நிலையத்தில் குளச்சல் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ், குழித்துறை இரயில் நிலையத்தில் கிள்ளியூர் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஆர்.ராஜேஸ்குமார் தலைமையில். குமரி மாவட்டத்தில் மூன்று இடங்களில் நடைபெற்ற இரயில் மறியலில் சில பெண்கள் கை குழந்தைகள் உடன் கைதானது.போராட்டத்தை வேடிக்கை பார்த்தவர்கள் மத்தியிலே ஒரு தனித்த ஈர்ப்பை ஏற்படுத்தியதை போராட்டம் நடத்த இடங்களில் காண முடிந்தது.
நாகர்கோவிலில் சந்திப்பு இரயில் நிலையத்தில் போராட்டக்காரர்களை அதிக சிரமம் இல்லாமல். இரயில்வே மற்றும் சட்ட ஒழுங்கு காவல்துறையினர் தடுத்து கைது செய்துவிட்டனர் காரணம். வந்து சேரும் தொடர்வண்டிகளும், புறப்பட்டு செல்லும் தொடர் வண்டிகள் என்ற நிலையில்.காங்கிரஸ் கட்சி தொண்டர்களை காவல்துறையால் சற்று கட்டுப்படுத்த முடிந்தது.


இரணியல் இரயில் நிலையத்தில் கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வழியாக செல்லும் தொடர் வண்டியை.இரணியல் இரயில் நிலையத்தில். குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் தலைமையிலான தொண்டர்கள் தடுத்து நிறுத்தி.பிரதமர், உள்துறை அமைச்சர், நாடாளுமன்ற சபாநாயகர், ஒன்றிய அரசிற்கும் எதிராக கோஷமிட்டனர். சிறிது நேரம் தொடர் வண்டி தடுத்து நிறுத்த பட்ட நிலையில்.தொடர்வண்டியில் பயணிகள் போராட்டத்தையும்,குவிக்கப் பட்டிருந்த காவல்துறையினரையும் வேடிக்கை பார்த்தார்கள்..இரயில்வே மற்றும் சட்ட ஒழுங்கு காவல்துறையினர்.சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் மற்றும் அவர்களுடன் இருந்த போராட்டக்காரர்களை சமாதானம் படுத்தி. அரைமணி நேரம் தாமதத்திற்கு பின் நிறுத்தப்பட் தொடர் வண்டி பயணத்தை தொடர்ந்த நிலையில்.சற்று நேரத்தில் மீண்டும் குழித்துறை இரயில் நிலையத்தில்.கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஆர். ராஜேஷ் குமார் தலைமையில் கூடி இருந்தவர்கள் ஏற்கனவே.மும்பை, கன்னியாகுமரி தொடர் வண்டி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் . களியக்காவிளை இரயில் நிலையத்தில் மீண்டும் இரணியலில் தடுக்கப்பட்ட தொடர் வண்டி மீண்டும்.தண்டவாளத்தில் குவிந்து இருந்த சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜேஸ்குமார் மற்றும் தொண்டர்களால் மீண்டும் தடுக்கப்பட்டது.தொடர்வண்டி நின்ற வேகத்தில்.இரயில் என்ஜின் மீது சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொண்டர்கள் ஏரீ நின்ற நிலையில் தலைக்கு மேல் அதி சக்தி வாய்ந்த மின்சார கம்பிகள் செல்வதை சொல்லி எச்சரித்து கீழே இறங்கினர் இரயில்வே காவலர்கள்.
ராகுல் காந்தி பதவி பறிப்பு,வீட்டை காலி செய்த மோடி அரசின் செயல் பாடுகளுக்கு எதிராக கோஷம் இட்டு, தொடர் வண்டியை தடுத்து வகையில்.நாகர்கோவில், இரணியல், குழித்துறை என மூன்று இடங்களிலும் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 1000_க்கும் ஆனோர் கைது செய்யப்பட்டு குழித்துறை பகுதியில் உள்ள இரண்டு மண்டபங்களில் வைக்கப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த தொண்டர்கள் மத்தியில் நடந்த பட்டி மன்றத்தில் நம் காதில் வந்து ஒலித்தது.விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜய் தரணியை காணவில்லை என பத்திரிகை களில் விளம்பரம் செய்யுங்கள் என உறக்க சொன்னதை.மண்டபத்தில் கூடியிருந்த காவல்துறையினரும், ஊடக, பத்திரிகையாளர்கள் வேடிக்கை பார்த்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *