கோவை இரத்தினம் கல்வி குழுமம் மற்றும் முன்னனி மென்பொருள் நிறுவனமான, கேட்பிளஸ்டியுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
கல்லூரியில் பயிலும் மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தவும், தொழில்நுட்ப அறிவை மேம்படுத்திக்கொண்டு, வேலை வாய்ப்புகளை உடனடியாக பெறும் விதமாக கோவை ஈச்சனாரி பகுதியில் செயல்பட்டு வரும், இரத்தினம் கல்வி குழுமம் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் முன்னனி மென் பொருள் நிறுவனமான கேட்பிளஸ்டி சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிகழ்வு இரத்தினம் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இதற்கான துவக்க விழாவில், இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் முனைவர். மதன் ஏ.செந்தில் தலைமை தாங்கினார். இரத்தினம் கல்விக் குழுமங்களின் செயல் அதிகாரி முனைவர். மாணிக்கம் ,மற்றும் துணைத்தலைவர் முனைவர்.நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கேட்பிளஸ்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்டினாஸ் வார்ஷ் , கேட்பிளஸ்டி நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி மகேஷ் ராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
முன்னதாக இரத்தினம் கல்வி குழுமங்களின் தலைவர் மதன் செந்தில் பேசுகையில்.., கல்லூரியில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் இது போன்ற நிறுவனங்கள் வாயிலாக தங்களது திறன்களை வளர்த்தி கொள்வதால் உடனடி வேலை வாய்ப்புகளை பெற முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய, கேட்பிளஸ்டி நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி மகேஷ் ராஜன் இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் கேட்பிளஸ்டி நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் இருப்பதாக கூறிய அவர்,சரியான முறையில் மாணவ,மாணவிகள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.தொடர்ந்து கேட்பிளஸ்டி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, மார்டினாஸ் பேசுகையில்,உலக அளவில் இளம் தலைமுறை மாணவ,மாணவிகள் இந்தியாவில் அதிகம் இருப்பதாக குறிப்பிட்ட அவர், வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை இந்திய மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இதனால் உலகம் முழுவதும் உள்ள வேலை வாய்ப்புகளை எளிதாக பெற முடியும் என குறிப்பட்டார்..தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், கேட்பிளஸ்டி நிறுவன இண்டர்ன்ஷிப்பிற்கு தேர்வான மாணவர்களுக்கு நியமன ஆணைகளை சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக இரத்தினம் கல்விக்குழும ஆசிரியர்களும், மாணவர்களும் கேட்பிளஸ்டி நிறுவனத்தில் பயிற்சிபெறுவதோடு,. ஆய்வுக்கட்டுரைகள், புதிய யோசனைகளுக்கான காப்புரிமை போன்றவற்றை இணைந்து செயல்படுத்து முடியும் என்பது குறிப்பிடதக்கது.