• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மதுரையில் மாமியார், மருமகள் கழுத்தறுத்து கொலை.., பேரன் கைது..!

ByKalamegam Viswanathan

Aug 17, 2023

மதுரையில் மாமியார் மருமகள் கொலை வழக்கு சம்பவத்தின் முதற்கட்ட விசாரணையில் காதலை கண்டித்ததால் பேரன் நண்பனுடன் சேர்ந்து சொந்த பாட்டியையும், அத்தையையும் கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை மாநகர் எல்லிஸ் நகர் போடி லைன் பகுதியைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநரான மணிகண்டன் இவருக்கும் அழகுப்பிரியா என்கிற பெண்ணுக்கும் திருமணமான நிலையில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் மணிகண்டனின் தாயார் மகிலம்மாள் மற்றும் மணிகண்டனின் மனைவி அழகுப்பிரியா ஆகிய இருவரும் இன்று வீட்டின் பின்புறம் பழைய பொருள்கள் சேமிக்கும் குடோன் போன்ற பகுதியில் இருவரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து எஸ் எஸ் காலனி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து எஸ் எஸ் காலனி காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில்;

இறந்த மயிலம்மாள் பேரன் குணசீலன் என்பவன் கல்லூரியில் ஒரு பெண்ணை காதலித்ததாகவும் அதனை பாட்டி மயிலம்மாள் மற்றும் அத்தை அழகுப்பிரியா கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குணசீலன் நேற்று மாலை தனது நண்பன் ரிஷியின் உதவியுடன் கத்தியால் தனது பாட்டி மயிலம்மாளின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்து குடோனில் போட்டு விட்டு பின்னர் வீட்டினுள் இருந்த அத்தை அழகுப்பிரியாவின் வாயை பொத்தி கத்தியால் அவரின் கழுத்தையும் அறுத்து கொலை செய்து பின்னர் வீட்டின் பின்புறம் இருந்த பழைய பொருட்கள் சேமிக்கும் குடோனில் போட்டு சாக்கு பையால் மூடிவிட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் குணசீலன்(வயது 20) மற்றும் ரிஷி(வயது 20) ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.