சோழவந்தானில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசன் சண்முகனார் மேல்நிலைப்பள்ளி புனரமைப்பு பணி அமைச்சர்கள் ஆட்சியர் எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி புனரமைப்பு பணி சுமார் 5 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது பழமை மாறாமல் சுண்ணாம்புக்கல் மணல் ஆகியவற்றை கொண்டு புணரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இதனை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வணிகவரி பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் சங்கீதா சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர் தொடர்ந்து கட்டிட புனரமைக்கும் பணி குறித்து கேட்டு அறிந்தனர். இதில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன், பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் துணைத் தலைவர் லதா கண்ணன் பேரூர் செயலாளர் சத்யபிரகாஷ் வார்டு கவுன்சிலர்கள் ஈஸ்வரி ஸ்டாலின் கொத்தாலம் செந்தில் நிஷா கௌதம ராஜா வக்கீல் முருகன் ஊத்துக்குளி ராஜா அண்ணாதுரை மில்லர் சங்கங்கோட்டை சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.